'துளசியின் மருத்துவ பயன்கள் | Medicinal Benefits of Tulasi | Basil Benefits'

'துளசியின் மருத்துவ பயன்கள் | Medicinal Benefits of Tulasi | Basil Benefits'
05:01 Jun 14, 2021
'Connect with us  @Facebook - https://www.facebook.com/thehealthtamil @Twitter - https://twitter.com/thehealthtamil @Instagram - https://www.instagram.com/dhivaraj/   மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் துளசி கட்டாயம் வளர்க்கப்படும் செடிகளுள் ஒன்று. எனவே உங்கள் வீட்டிலும் துளசி செடி இருந்தால், உங்களுக்கு ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.  காய்ச்சல்  காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும்.  தொண்டைப்புண்  தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.  தலை வலி  உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.  கண் பிரச்சனைகள்  கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.  வாய் பிரச்சனைகள்  ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது வாய் துர்நாற்றம் அடித்தாலோ, அப்போது துளசியை உலர வைத்து, பொடி செய்து, அத்துடன் கடுகு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து, ஈறுகளில் தடவி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், வாய் பிரச்சனைகள் அகலும்.  இதய நோய்  தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.  சளி, இருமல்  இருமல் கடுமையான சளி மற்றும் இருமலால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.  நீரிழிவு  நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.  சிறுநீரக கற்கள்  துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.  மன அழுத்தத்தைக் குறைக்கும்  மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்.' 

Tags: basil , tulsi , tulasi , மருத்துவம் , basil benefits , tamil herb , மூலிகை , மூலிகை மருத்துவம் , medicinal benefits of tulasi

See also:

comments

Characters